Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...

Around the World

  • Israel's prime minister and defence minister praise the attack as Hamas calls for Israeli 'crimes' to stop.

    Read more...
  • Seven people have been charged in connection with damage to Donald Trump’s Turnberry golf resort in Scotland in 2025.

    Read more...
  • The rejection is a temporary setback for immigrant rights advocates, who have been instructed to revise their petition.

    Read more...
  • Kevin Warsh in speech underscores Fed's commitment to tackling inflation, with rate hikes possibly on horizon.

    Read more...
  • Healthy domestic demand, led by consumer spending and business investment, shows Canada was brushing off past tariffs.

    Read more...
  • Al Jazeera reports from flood-hit Bidur, Nepal, as residents flee towards higher ground amid threats of another flood.

    Read more...
  • Israeli restrictions and war damage have created a liquidity crisis, crippling Gaza's banking system and daily commerce.

    Read more...
  • After repeated disappointments over US Patriots, Kyiv switches to attacking Russia using European weapons.

    Read more...
  • The latest round of attacks comes as Palestinians across the strip continue to face severe food insecurity.

    Read more...
  • The head of India’s controversial Hindu nationalist RSS is due to speak in New York.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.29, 2013.06.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 1980 களில் இருந்து மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளும்,சோவியத் யூனியனும் பெரும் பொருளாதார அவலத்திற்கு உள்ளாகத் தொடங்கின.இந்நிலைமை சீனாவினை அச்சம் கொள்ள வைத்தது. ஆயினும் 1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சி கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன், சீனாவின் கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் மறுசீரமைக்க வைத்;தது. சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அவலம் சீனாவிற்கும் ஏற்படாமல் இருப்பதற்கு சீனத் தலைவர்கள் 'சோசலிச சந்தைப் பொருளாதாரம்' என்ற புதிய பொருளாதாரக் கொள்கையினை அறிமுகப்படுத்தினார்கள். இது பின்னர் 'சீனா மாதிரியிலான முதலாளித்துவம்' எனவும் அழைக்கப்பட்டது.

சோசலிச சந்தைப் பொருளாதாரம்

1978 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த டெங் செயாப்பிங் (Deng Xiaoping) சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தத்தினை முன்வைத்தார். 1978 ஆம் ஆண்டு சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சீனாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவிற்கு வளர்ச்சியடையத் தொடங்கியது. 1953 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டுவரையில் சீனாவின் உண்மையான வருடாந்த மொத்தத் தேசிய உற்பத்தி 6.7 % மாக இருந்;ததாக சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பொருளாதாரச் சீர்திருத்தம் 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் சீனாவின் வருடாந்த சாராசரி மொத்தத் தேசிய உற்பத்தி 9.6 % மாக வளர்ச்சியடைந்ததாகவும் சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் 1992 ஆம் ஆண்டு ஆனிமாதமே முதல்தடவையாக சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சீனாவின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படுகிறது என டெங் செயாபிங் தென் சீனாவில் நிகழ்த்திய உரையொன்றில் தெரிவித்திருந்தார்.

பொருளாதார வளர்ச்சி

சோசலிச சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சீனாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியினை விட சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து சீனாவினை உலகின் பெரும் பொருளாதாரச் சக்தியாகச் மாற்றிவிடலாம் என்று பல ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள்.

பொதுவாக சர்வதேச வர்தகத்திற்குப்; பயன்படும் அமெரிக்க டொலரின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி முதல்தடவையாக 8.2 நூறாயிரம் கோடி (trillion) அமெரிக்க டொலரைத் தாண்டியிருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் 55 சதவீதமாகும்.2013 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 8.5 நூறாயிரம் கோடி (Trillion) அமெரிக்க டொலரைத் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான பொருளியல் நிபுணர்கள் 2017 ஆம் ஆண்டிற்கும் 2030 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஐக்கிய அமெரிக்காவினை விட பெரும் முதன்நிலைப் பொருளாதார பலமுடைய நாடாக சீனா வளர்ச்சிடையும் எனவும், 2050 ஆண்டில் சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உலகில்; வளர்ச்சியடைந்த முதல்நிலைப் பொருளாதார நாடுகளாக எழுச்சியடையும் எனவும் எதிர்வு கூறுகின்றார்கள்.

ஆயினும் 2008ஆம் ஆண்டு பூகோளப் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இது சீனாவின் ஏற்றுமதி பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தியது. இதனால் 2007 ஆம் ஆண்டு 14.2 % மாக இருந்த சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 2008 ஆம் ஆண்டு 9.6 % மாகவும், 2009 ஆம் ஆண்டு 9.2 % மாகவும் வீழ்;ச்சியடைந்தது. இப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பெடுத்துக் கொண்ட சீன அரசாங்கம் சீனாவின் பொருளாதாரத்தினை மீளக் கட்டமைப்பதற்கான உந்து சக்தியை வழங்கத் தொடங்கியது.

இதன்விளைவாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 10.4 % மாக வளர்ந்தது. இது 2011 ஆண்டு 9.2 % வளர்ச்சியை காட்டியது. 2012 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 7.8 % மாக மாறியது. சர்வதேச நாணயநிதியம்; 2013 ஆம் ஆண்டிற்கும் 2017 ஆம் ஆண்டிற்குமிடையில் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 8.5 % வளர்ச்சியினை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம் முன்னணி கைத்தொழில் நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியினை சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகின்ற போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதி மிகையானதாகவுள்ளது எனவும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பு

உலகில் பாரிய கைத்தொழில் உற்பத்தி நாடாக சீனா எழுச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதியில் சீனா, ஐக்கியஅமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகள் உற்பத்தி செய்திருந்த கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இக்கணிப்பீட்டினை மேற்கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் கைத்தொழில் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்த யப்பானை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிட்டு சீனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 2011 ஆம் ஆண்டு கைத்தொழில் உற்பத்தியில் சீனா ஐக்கிய அமெரிக்காவினைவிட முன்னேறியிருந்தது.

உலக கைத்தொழில் உற்பத்தியில் ஐக்கிய அமெரிக்கா,யப்பான் ஆகிய நாடுகள் வகிக்கும் வகிபாகத்தினை விட சீனா வகிக்கும் வகிபாகமானது முதன்மையானதாகும். 2011 ஆம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் உற்பத்தியின் பெறுமதி 32.3 % சமமாக இருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 12.1% மாகவும், யப்பானின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 18.9 % மாகவும் இருந்தது. 2013 ஆம் ஆண்டிற்கான பூகோள உற்பத்தி போட்டிக்குரிய சுட்டெண் (Global Manufacturing Competitiveness Index) தயாரித்த தரவரிசைப்படி கைத்தொழில் உற்பத்தியில் 2013 ஆம் ஆண்டு சீனா முதலாம் இடத்திலுள்ளதாக கணிப்பிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா மூன்றாம் இடத்திலுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா கைத்தொழில் உற்பத்தியில் ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

வர்த்த மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள்

1990 ஆம் ஆண்டு சீனாவில் கொண்டுவரப்பட்ட வர்த்த மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பெருக்கத்தினை ஊக்கப்படுத்தியது. நேரடி முதலீட்டிற்கான பெருக்கம் சீனாவின் மிகையான பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கும் பெரும் வளமாக இருந்தது.

சீனாவின் வெளிநாட்டு வர்;த்தகத்தின் வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தில் 20.6 பில்லியன் டொலராக அதிகரித்தது. வருடாந்த உள்நாட்டு உற்பத்தி 9.6% மாக வளரச்சியடைந்தது. 2005 ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்;த்தகம் 851 பில்லியன் டொலராக அதிகரித்தது. இதன் மூலம் சீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியானது உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. 2010 ஆம் ஆண்டில் 27,406 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும்,2011 ஆம் ஆண்டில் 25,086 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், 2012 ஆம் ஆண்டில் 24,925 புதிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் சீனாவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் சீனாவின் கைத்தொழில் துறைக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கிவருகின்றன. சீனாவின் கைத்தொழில் துறைக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1990 ஆம் ஆண்டில் 2.3% பங்களிப்பினையும், 2003 ஆம் ஆண்டில் 35.9% பங்களிப்பினையும், 2010 ஆம் ஆண்டு 27.1% பங்களிப்பினையும் வழங்கியிருந்தன.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்களவிற்குப் பொறுப்பாகவுள்ளன. 2011 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதியில் 52.4 % த்திற்கும், இறக்குமதியில் 49.6 % த்திற்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களே பொறுப்பாக இருந்தன. ஆயினும் 2006 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்பில் இது கணிசமானளவு வீழ்ச்சியை காட்டுகின்றது. 2006 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதியில் 58.2% த்திற்கும் இறக்குமதியில் 59.7% த்திற்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பொறுப்பாக இருந்தன.

மேலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவின் உயர்தொழிநுட்ப ஏற்றுமதியில் கூடியளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளன.2002 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் சீனாவின் உயர் தொழில் நுட்ப பொருட்களின் ஏற்றுமதிகள் 79% த்திலிருந்து 82% மாக உயர்வடைந்திருந்தன. சீனாவின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால்; 1985 ஆம் ஆண்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பாச்சலாகக் கிடைத்திருந்தன. 2008 ஆம் ஆண்டு இந்நிறுவனங்கள் 108 பில்லியன் அமெரிக்க டொலர்களை உட்பாச்சலாகப் பெற்றுக் கொடுத்திருந்தன.

ஆனால் பூகோளப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இவ் உட்பாச்சலானது 2009 ஆம் ஆண்டு 90 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்ததாயினும்; பின்னர் இவ் உட்பாச்சலானது 2010 ஆம் ஆண்டு 106 பில்லியன் அமெரிக்க டொலராகவும், 2011 ஆம் ஆண்டு 116 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. இவ் உட்பாச்சல் அதிகரிப்பு 2012 ஆம் ஆண்டு 112 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது.

ஐக்கியநாடுகள் சபையின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அறிக்கையின் படி 2011 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யப்படும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான இடங்களில் சீனா முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி

கடந்த இருபது வருடங்களில் சோசலிச சந்தைப் பொருளாதார முறைமையின் மூலம் புதியமுறைமைகளைப் புகுத்தி குறிப்பிடத்தக்களவு வெற்றியினை சீனா அடைந்ததுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகின்ற போது 36.6 % வளர்ச்சியைக் கொண்டிருந்த சீனா 2000 ஆம் ஆண்டில் 53.8 % வளர்ச்சியை பெற்றுக்கொண்டது. 2010 ஆம் ஆண்டில் இவ்வளர்ச்சியானது 112.9 % மாகா அதிகரித்திருந்தது. அங்குஸ் மெடிசன் (Angus Maddison) அறிமுகப்படுத்திய கொள்வனவு சக்திச் சமனிலை (Purchasing Power Parity - PPP) முறைமையின் அடிப்படையில்; 1990 ஆம் ஆண்டில் 6.2 % மாக இருந்த கொள்வனவு சக்திச் சமனிலை 2000 ஆம் ஆண்டு 12.1 மூ மாகவும் 2010 ஆம் ஆண்டு 39.6 % மாகவும் அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கையின்படி 1990 ஆம் ஆண்டு 54 % மாக இருந்த சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2010 ஆம் ஆண்டு 74 % மாகா அதிகரித்திருந்தது.

சீனாவின் பலமும், பலவீனமும் பொருளாதாரமேயாகும். பொருளாதாரமே சீனாவின் மையக் கொள்கையும், தந்திரோபாயங்களின் மையப் பொருளுமாகும். சீனாவின் உறுதியான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்கள், வளங்கள் என்பவற்றை உலக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சீனா நம்பிக்கையுடன் உள்ளது.

சீனாவின் கம்யூனிசக் கட்சியின் மகாநாட்டில் டெங் செயாபிங் ஆற்றிய உரையில் 'சோசலிச சந்தைப் பொருளாதார முறைமையின் அடிப்படையில் சீனாவின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படும். சோசலிசத்துடன் சந்தைப் பொருளாதாரத்தினை இணைத்தல் என்ற எண்ணக்கரு புதுமையானதும்,மிகவும் அறிவாற்றல் மிக்கதுமான ஆரம்பமும் சோசலிசக் கோட்பாட்டிற்குச் செய்யப்பட்ட புரட்சிகர அபிவிருத்தியாகும். இருபது வருடங்களுக்குப் பின்னர் சீனாவின் சோசலிச சந்தைப் பொருளாதாரத்தினால் ஏற்பட்ட உண்மையான விளைவுகளை மிகவும் ஆழமாக நாங்கள் மதிப்பீடு செய்வது அவசியமாகும்.' என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

டெங் செயாப்பிங் 'சுதந்திரமான உற்பத்தி அதிகரிப்பு, சுரண்டலையும் வர்க்க வேறுபாடுகளையும் இல்லாதொழித்தல் என்பவற்றின் மூலம் பொதுவான செல்வச்செழிப்பினை அடைதலே சோசலிசத்தின் பிரதான இறுதி இலக்காகும். சோசலிச சந்தைப் பொருளாதார மறுசீரமைப்பின் இறுதி இலக்கு பொதுவான செல்வச்செழிப்பினை அடைதலேயாகும்' எனக் கூறுகின்றார்.ஆகவே இவ் இலக்கினை அடைவதற்காகக் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியேற்படும். இதற்காக சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பில் இரண்டு பிரதான விடயங்கள் சிறப்பாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவைகளாவன

1. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சந்தைப் பொறிமுறையினைப் பயன்படுத்தி சந்தையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல்

2. சீர்திருத்தத்தின் மூலம் சிறந்த பொதுச் சேவையினை வழங்குதல் அதாவது திட்டமிடப்பட்ட பொருளாதாரம், பொருளாதாரம் மீதான நுண்ணிய கட்டுப்பாட்டினை விருத்தி செய்தல், பொதுச் சேவையின் செயற்திறனை விருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் தொழிற்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தி சமுதாயத்தின் பொதுவான செல்வச்செழிப்பினை கட்டியெழுப்புதல் என்பனவாகும்.

தென்கொரியா, தாய்வான், தாய்லாந்து, கொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஆசியப் புலிகள் எனச் சிறப்பித்துக் கூறப்பட்ட நாடுகளாகும். இந்நாடுகள் 1960 களிலிருந்து கைத்தொழில்மயவாக்கம், உறுதியான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் முன்னேற்றமடைந்து வந்தன. இருபத்தியோராம் நூற்றாண்டின் கைத்தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் உறுதியடைந்த சீனா ஆசியப் புலிகளின் பாரிய பொருளாதார வளர்ச்சியை வெற்றி கொண்டு ஆசிய றக்கன் எனப் பெயர் பெற்றுத் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

Share

Who's Online

We have 30 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.