Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...

Around the World

  • Mnangagwa allies push for a term extension to 2030 as ZANU-PF factions split and opposition promises a legal fight.

    Read more...
  • Labour organiser Chris Smalls tells Marc Lamont Hill why he believes workers worldwide should stand with Palestine.

    Read more...
  • Leandro Trossard scores the only goal at Fulham as Arsenal climb back above Manchester City at the top of the table.

    Read more...
  • Hamas handed over the remains of a tenth deceased Israeli captive, while Palestinians are struggling to identify bodies.

    Read more...
  • More than 2,600 rallies are planned in cities large and small, organised by hundreds of coalition partners.

    Read more...
  • Israeli settlers and soldiers continue to terrorise Palestinian communities in preparation for annexation.

    Read more...
  • The spectacle of the Gaza deal and double standards in the coverage of the captives' release in Israel and Gaza.

    Read more...
  • All the updates from our comprehensive text commentary stream of the Premier League game, including post-match reaction.

    Read more...
  • Cameroon-flagged tanker issues distress call about 60 nautical miles (110km) south of Yemen's Ahwar in Gulf of Aden.

    Read more...
  • The plant's last external lines were severed in September in attacks that Russia and Ukraine blame on each other.

    Read more...
அரசுபற்றிய தாராண்மைவாதக் கோட்பாடு - 3.8 out of 5 based on 18 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.86 (18 Votes)

தனிமனித உரிமைகளையும் மரபுகளையும் அழிக்க முற்பட்ட திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதன் பின்னர் தோன்றிய அரசியல் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் எழுச்சியடைந்த ஒரு தத்துவமே தாரண்மைவாதமாகும்.. மறுமலர்ச்சிக் காலத்தில் மறுமலர்ச்சி இயக்கங்களும் சீர்திருத்த இயக்கங்களும் தோற்றம் பெற்று திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து மனிதனை விடுவித்துக் கொண்டது. திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து மனிதனை விடுவிக்க தாராண்மை சிந்தனையே பயன்படுத்தப்பட்டது. திருச்சபை காலத்தின் பின்னர் தோற்றம் பெறுகின்ற புதிய தேசிய அரசுகள் முடியாட்சிக்குட்பட்டு ஏதேச்சதிகார ஆட்சிக்குட்பட்டன. இந்நிலையில் ஏதேச்சதிகார ஆட்சி முறையிலிருந்து மனிதனை விடுவிக்க தாராண்மை வாதம் முற்பட்டது. இதன் முதல் முயற்சியாக பிரித்தானிய அரசியல் திட்ட வரலாற்றில் ஏதேச்சதிகார ஸ்ருவேர்ட் மன்னர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். பிரித்தானிய எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் பெற்றுக் கொண்ட வெற்றி தாராண்;மைவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

கைத்தொழில் புரட்சியின் விளைவாக பலம் வாய்ந்த ஒரு வர்த்தக வகுப்பு தோற்றம் பெற்றது. இவ்வர்க்கத்திற்கு தமது முதலீடுகளை பாதுகாக்கவும் வர்த்தகத்தை வளர்க்கவும் சமூக அந்தஸ்தினை பேணுவதற்கும் அரசியல் உரிமை அவசியமாகியது. எனவே இவ்வர்க்கம் மன்னனின் ஏகபோக அதிகாரத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது. மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தமது அரசியல் சமூக பொருளாதார நலன்களினை வளர்க்க வர்த்தக வகுப்பு முயற்சித்தது. இதனால் தாராண்மை வாதத்தினை மத்திய வர்க்க தத்துவம் (Middle class Philosophy) எனவும் அழைக்கிறார்கள். ஆகவே தாராண்மை வாதத்தினை தனிமனித சுதந்திரங்களை விரும்புகின்ற, தலையிடல் கொள்கையினை ஆதரிக்கின்ற, தனிமனிதனின் ஆற்றல்களில் நம்பிக்கையுள்ள, அரசியல் திட்ட ஜனநாயகத்தினை வரவேற்கின்ற ஒரு தத்துவம் என விளங்கிக் கொள்ளலாம். தாராண்மை வாதத்தின் வளர்ச்சிக்கு 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லொக், ரூசோ, வோல்ரயர், பேர்க், மொண்டஸ்கியூ போன்றோர்களும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பென்தம், மில், கிறீன் போன்றோர்களும், 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வொலாஸ், லஸ்கி, கோல் ரஸல், மக்ஜவர், கெய்ன்ஸ் லஸ்வெல் போன்றோர்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.

பங்களிப்புக்கள்

17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த லொக் தனியாள் வாதம் ( Individualism ) இயற்கை உரிமைகள் ( Natural Rights )என்பவற்றினூடாக தாராண்மை வாதத்தை விளக்குகிறார். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் மன்னனுடைய கட்டுகடங்காத அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும். அரசு என்பது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தோற்றம் பெற்றது. மக்கள் தமது நலன் பேணும் நோக்கில் தாமாக முன்வந்து சில அதிகாரங்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கினர். ஒப்பந்த நியதிகளை மன்னன் மீறும் போது மன்னனை நீக்கி விட மக்களுக்கு உரிமை உண்டு. இது அரசியல் திட்ட முடியாட்சியிலேயே சாத்தியமாகும். அரசு என்பது மக்களின் சம்மதத்திலும் நம்பிக்கையிலுமே நிலை பெற முடியும் என லொக் வாதிடுகிறார். லொக்கின் தாராண்மைவாதக் கருத்துக்கள் 17ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவிலும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.

18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ரூசோ மக்கள் ஆட்சியை முன் வைக்கிறார். நவீன ஜனநாயகத்தின் முன்னோடியாகிய ரூசோ ஜனநாயகத்தின் முக்கிய இயல்புகளாகிய பொது விருப்பு, இறைமை, நேரடி ஜனநாயகம் என்பவற்றை வலியுறுத்துகின்றார். ரூசோவின் கருத்துக்கள் பிரான்சில் புரட்சி ஏற்படுவதற்கு காரணமாகியதுடன் சுதந்திரம் சமத்துவம் போன்ற ஜனநாயக கருத்துக்கள் உருவாகவும் காரணமாகியது. உண்மையில் தாராண்மைவாதத்தில் ஜனநாயகக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியவர் ரூசோவேயாவார்.

ரூசோவிற்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பயனுடைமைவாதியான (Utilitarian)பென்தம் என்பவர் தாராண்மைவாதம் தொடர்பாக புதிய அணுகுமுறையினை முன்வைக்கிறார். தனியாள் வாதம், இயற்கை உரிமைகள் ஒப்பந்த அடிப்படையிலான அரசு போன்ற ஆரம்பகால தாராண்மைவாதக் கருத்துக்களை நிராகரித்து பயனுடைமை வாதத்தின் அடிப்படையில் புதிய தாராண்மைவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். ஒரு செயலின் பயன்பாடான மகிழ்ச்சி அல்லது துன்பம் என்பதுதான் மனித நடத்தையை தீர்மானிக்கின்றது.அரசு வேறுபாடு கடந்து பெரும்பான்மை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதனை இயற்கைச் சட்டங்களுடாக நிறைவேற்ற முடியாது. பாராளுமன்ற சட்டங்கள் மூலமே நிறைவேற்ற முடியும். சமுதாயத்தின் நல்வாழ்வு திறமை வாய்ந்த சட்டவாதியின் கையிலேயே தங்கியுள்ளது என வாதிடுகிறார்.

19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் வாழ்ந்த ஜே.எஸ்.மில் ( J.S.Mill )இன் கருத்துக்கள் பென்தம் இன் கருத்துக்களுக்கு மேலதிக விளக்கமாக அமைந்தது. சந்தர்ப்பங்களையும் தேவைகளையும் சமுதாயத்திலுள்ள மக்களுக்கு சமமாகப் பகிர வேண்டுமானால் அரசு தீவிரமான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இச்சட்டங்களில் மக்களுடைய அபிப்பிராயங்களையும் பங்குபற்றுதலையும் ஏற்படுத்துவதற்காக வாக்குரிமை பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் போன்ற ஜனநாயக பண்புகளை பென்தம் முதன்மைப்படுத்துகிறார்.

ரி.எச்.கிறீன் ( T.H.Green)இன் கருத்துக்கள் தாராண்மை வாதத்தின் வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இவருடைய காலத்தில் சோசலிசக் கருத்துக்கள் வளர்ந்து வந்தன. இதற்கு ஈடுகொடுத்து நிலைத்து நிற்க வேண்டுமாயின் தாராண்மை வாதம் பாரிய மாற்றங்களை உள்வாங்க வேண்டியிருந்தது. தாராண்மைவாதிகள் ஆரம்பம் முதல் தனி மனிதர்களின் நலன்கள் பேணப்படும் போதே சமுதாய நலன்கள் பேணப்பட முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். இக்கருத்தை கிறீன் மாற்றியமைத்தார். சமுதாய நலன்கள் பேணப்படும் போதுதான் தனிமனித நலன்கள் பேணப்பட முடியும். சமுதாய நலன்கள் பேணப்பட வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரத்தைப் பேணுதல் போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றுவதன் மூலம் சமுதாய நலனும் தனிமனித நலனும் பேணப்பட முடியும். கிறீன் முன்வைக்கும் இக்கருத்துக்கள் தாராண்மை வாதத்தினை தாராண்மை சோசலிசமாக மாற்றியது எனக் கூறப்படுகிறது.

கேயின்ஸ் என்ற அறிஞர் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நவீன வர்த்தக உலகிற்கு ஏற்றதாக தாராண்மை வாதத்தினை மாற்றியமைத்தார். ஆரம்பகால தாராண்மைவாத அறிஞர்களில் ஒருவரான அடம்ஸ்மித் 'நாடுகளின் செல்வம்' என்ற நூலில் கூறுகின்ற தனியுரிமைப் பொருளாதாரம் தற்காலத்திற்கு பொருத்தமற்றது. அதே சமயம் அரசியல் மத்திய திட்டமிடலைக் கொண்ட சோசலிசப் பொருளாதாரமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இவையிரண்டிற்கும் இடையிலான நிலையினை உருவாக்க கெயின்ஸ் முற்பட்டார். ஏற்கனவே தனிமனிதர்கள் தமது ஆற்றலினால் செய்து வருகின்ற எல்லாவிடயத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆனால் தனிமனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பல விடயங்களில் சமுதாய நலன்கருதி அரசு தலையிட வேண்டும். அரசின் தலையீடு பின்வரும் மூன்று வழிகளில் அமையலாம். அவைகளாவன நிதி தொடர்பான விடயங்கள், பொதுக் கொள்கை உருவாக்கம் தொடர்பான விடயங்கள், பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் என்பவைகளாகும். கெயின்ஸின் கருத்துக்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பும் பின்பும் அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களால் வரவேற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பிரதான இயல்புகள்

தாராண்மை வாதம் சமயச் சார்பற்ற தன்மைகளை வலியுறுத்துகின்றது. சமய நம்பிக்கைகளில் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள மனிதனை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். மனிதன் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் விமர்சன நோக்கில் அணுகவும் அனுமதிக்கப்படல் வேண்டும். மனிதன் தனது பழக்க வழக்கங்கள் மரபுகள் முலம் நிறுவனங்களை மாற்றிக் கொள்ள உரிமையுடையவன். மனிதனது உண்மையான சுதந்திரத்திற்கு இவைகள் விலங்குகளாக உள்ளன. தனிமனித சுதந்திரமே சமுதாய விடுதலையைத்தரக் கூடியது. தாராண்மைவாத சிந்தனையாளராகிய ஹோப் ஹவுஸ் ( Hobe House )என்பவர் “தாராண்மைவாதம் என்பது சிவில் தனிமனித பொருளாதார சமூக, அரசியல், சட்ட, தேசிய சர்வ தேசிய சுதந்திரங்களை உள்ளடக்கிய தத்துவமாகும்” எனக் கூறுகிறார்.

தாராண்மைவாதம் தலையிடாக் கொள்கையினை வலியுறுத்துகிறது. தலையிடாமை இருக்கும் போது தான் உண்மையான சுதந்திரம் இருக்க முடியும். பொருட்களை உற்பத்தி செய்ய விநியோகம் செய்ய, பரிமாற்றம் செய்ய, விரும்பிய தொழிலை அல்லது வர்த்தகத்தினை செய்ய தனது சொத்துக்களை வைத்திருக்க அல்லது அழித்துவிட மனிதன் அனுமதிக்கப்படல் வேண்டும். இவற்றின் மீது அரசின் தலையிடாமை இருக்க வேண்டும். இதனால் தாராண்மைவாதிகள் அரசனுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆரம்ப காலத்திலிருந்து போராடினார்கள்.

தாராண்மைவாதம் தீவிர சீர்திருத்தங்களினாலோ, தலையீடுகளாலோ, புரட்சிகளாலோ, போராட்டங்களாலோ சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புவதில்லை. சமூக மாற்றம் இயற்கை விதிகளின்படி தன்னிச்சையாக அமைதியான முறையில் படிப்படியாக ஏற்படுவதாகும். இயற்கை விதிகளுக்கு மனிதன் கட்டுப்பட வேண்டுமேயொழிய செயற்கையான புற விதிகளுக்கு மனிதன் கட்டுப்படக் கூடாது. நிர்ப்பந்தம் என்பது தலையீட்டினையே ஏற்படுத்தும். தனிமனித ஆற்றலிலுள்ள அபார நம்பிக்கையே தனிமனித சுதந்திரங்களையும் தலையிடாக் கொள்கையினையும் தாராண்மைவாதம் வலியுறுத்தக் காரணமாகும். தலையிடாமையும் சுதந்திரமும் இருக்கும் போதே தனிமனிதன் தனது பங்களிப்பை சமுதாயத்திற்கு வழங்க முடியும். தாராண்மைவாதம் மனிதனை உயர்ந்தவனாகவும் அறிவாளியாகவும் நோக்குகிறது. மனிதனது உரிமைகள் அந்தஸ்துக்கள் நலன்கள் போன்றவற்றிற்கு உத்தரவாதமளிக்கப்படும் போது அவன் தனது கடமையினை அபிவிருத்தி செய்ய முடியும். இதன் மூலமே சமுதாயத்திற்கு அவனது சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என தாராண்மைவாதம் நம்புகிறது.

தலையீடாக் கொள்கையினையும் சுதந்திரங்களையும் ஏற்படுத்துவதற்கு அரசியல் திட்ட ஜனநாயகத்தினை தராண்மைவாதிகள் முதன்மைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஜனநாயக முறையிலுள்ள வலுவேறாக்கம், சமனிலைத் தலையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மக்களுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறுகின்ற பண்பு, சர்வஜன வாக்குரிமை, பத்திரிகைச் சுதந்திரம், நீதித்துறைச் சுதந்திரம், சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சிந்திக்கும் சிந்தனையினை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற சுதந்திரங்களை முதன்மைப்படுத்த முடியும். இவ் அரசியல் திட்ட ஜனநாயகத்தினை உருவாக்க இங்கிலாந்தில் தாராண்மைவாதிகள் மன்னனுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தினார்கள். அரசியல் திட்ட ஜனநாயகமே தாராண்மைவாதிகளின் குறிக்கோளாக இருந்தது.

தூய்மையானதும் தனித்துவமானதுமான தாராண்மைவாதம் மறைந்து விட்டது. தாராண்மை வாதக் கருத்துக்கள் பல புதிய வடிவங்களில் நவீன முதலாளித்துவ கோட்பாடுகளுள் ஊடுருவியுள்ளன. தாராண்மை வாத அரசுகள் இந்நூற்றாண்டில் நலன் பேண் அரசுகளாக மாறியுள்ளன. அதாவது அரசு சமுதாயத்தின் பொதுநலனை மையமாக கொண்டு இயங்குவதாகும். ஆரம்பகாலத்தில் தாராண்மைவாதிகள் அரசின் தலையீட்டை கண்டித்தனர். ஆயினும் பென்தம், மில், கிறீன், கெயின்ஸ் போன்றவர்கள் அவசியமான துறைகளில் அரசின் தலையீட்டை வரவேற்றனர். பொதுநல அரசு என்பது அரசின் தலையீடு அற்ற ஆரம்பகால தாராண்மைவாத அரசிற்கும் அரசின் தலையீடுகள் மிகுந்த சோசலிச அரசிற்கும் இடைப்பட்ட ஒரு அரசாகும். தாராண்மைவாத அரசுகள் பொதுநல அரசுகளாக மாறியதன் மூலம் சோசலிசத்தின் சவால்களை ஓரளவிற்கு எதிர்த்து நிற்க முடிந்தது. அதே வேளை சோசலிசக் கருத்துக்களின் தாக்கமே தாராண்மைவாத அரசுகளை நாளடைவில் பொதுநல அரசுகளாக மாற்றியது.

Share

Who's Online

We have 69 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.