Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • When Germany was divided, the Guetingers were among the 70 million people split between two opposing nations.

    Read more...
  • Meanwhile, Ukrainian drone hits home in southern Russia, killing two children and injuring their parents, officials say.

    Read more...
  • On Gaza’s shore, 1,300 Palestinian children joined a swimming class to cope with the trauma of Israel’s genocidal war.

    Read more...
  • Chinese robot reaches peak ​speed of 14.5 metres per second to beat Bolt's 100m record in Beijing, says state media.

    Read more...
  • Health authorities are warning that ‘approximately one person has been dying from Ebola every thirty minutes’.

    Read more...
  • Party launches legal action after authorities take ex-PM to ⁠state hospital for check-up ⁠before returning him to jail.

    Read more...
  • Enzo Maresca faces the formidable challenge of following the legendary manager Pep Guardiola as new season starts.

    Read more...
  • Zolani Tete, who held WBF flyweight and WBO bantamweight world titles, killed at his home in Eastern Cape, South Africa.

    Read more...
  • Foreign Ministry spokesman Esmaeil Baghaei slams Trump's latest threat as a return to 'full-scale classic colonialism'.

    Read more...
  • Left-armers star in wicket bonanza as Australia take 101-run lead over Bangladesh on first day of the second Test.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இரு விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது. முதலாவதாக அரசு உருவாக்கப்படுவதில்லை. பதிலாக அரசு வளருகின்றது.அரசு வளர்கின்றது அல்லது படிப்படியாக வளர்கின்றது. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அரசு வளர்ந்து வருகின்றது என்ற கருத்து இதன் மூலம் வலியுறுத்தப்படுகின்றது.இரண்டாவதாக அரச கட்டுமானத்தினை ( State building )உருவாக்குவதில் பல காரணிகள் பங்கேற்கின்றன என்பதாகும்.அரசு இறைவனின் படைப்பாக அல்லது பலமுடையவனின் படைப்பாக அல்லது சமூக ஒப்பந்தத்தின் விளைவாக அல்லது தாய் தந்தை வழியாக அல்லது இது போன்ற பல வழிகளினால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இங்கு அரசு ஒரு படிமுறைக்கூடாக வளருகின்றது என்பதே இக் கோட்பாட்டாளர்களின் கருத்தாகும். கெட்டல் என்பவர் இது தொடர்பாக கூறும் போது 'ஏனைய சமூக நிறுவனங்களைப் போலவே அரசும் வேறுபட்ட நிபந்தனைகள் வழிமுறைகள் வளங்கள் என்பனவற்றில் இருந்து எழுந்ததாகும். இது பெருமளவிற்கு புலனுக்குட்படாத வகையில் எழுந்ததாகும் என்கின்றார்.

அரசு சமுதாய வளர்ச்சியின் பெறுபேறு எனின் அரசு என்ற நிறுவனத்தின் படிமுறை வளர்ச்சிக்கு உதவி செய்த காரணிகள் எவை என்ற வினா எழுவது இயற்கையானதாகும். அவைகளை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

இரத்த உறவு ( Kinship)

இரத்த உறவு என்பது குடும்ப வாழ்க்கையினை உருவாக்கிய முதன்மையான காரணியாகும்.ஓழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை ஒன்றிற்கான அடிப்படையாகிய தந்தை, தாய் , பிள்ளைகள் ஆகிய மூலக்கூறுகளின் வழி முதல் சமூக அலகு தோற்றுவிக்கப்படுகின்றது.இச்சமூக அலகில் தந்தை முதன்மையானவனாக இருந்த போது தந்தை வழி கோட்பாடாகவும், தாய் முதன்மையானவளாக இருந்த போது தாய்வழிக் கோட்பாடாகவும் உலகில் அரசு தோன்றியதாக கருதப்படுகின்றது.

ஆரம்பத்தில் மனிதர்கள் இரத்த உறவின் அடிப்படையில் ஒன்றுபட்ட சமூகமாகவே வாழ்ந்தார்கள். குடும்பம் தனது குடும்ப தலைமைத்துவத்தினை தானே தெரிவு செய்து கொண்டது. இத்தலைமைத்துவமே குடும்பத்தினை வழிநடாத்தியது. இங்கு குடும்பத்தின் மீதான அதிகாரம் என்பது முதல் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.இங்கு தாய் அல்லது தந்தை முழு அதிகாரத்தினையும் பெற்றவராக காணப்பட்டார். குடும்பம், குடியாக ( Tribe )மாறுகின்ற போது அல்லது வளருகின்ற போது இது குடும்பத்தினை விட பெரிய அலகாக உருவாகின்றது.குடிகள் தமக்கான ஒரு தலைமைத்துவத்தினை தெரிவு செய்ததுடன் இதுவே முழு அதிகாரத்தினையுமுடைய நிறுவனமாக காணப்பட்டது. குடிகள் பின்னர் பொதுநல அமைப்புகளாக வளர்ந்தன இப் பொது நல அமைப்புகள் சமூகமாக வளர்ந்து சமூகம் அரசு என்ற நிலையினை இரத்த உறவின் வழி பெற்றுக்கொண்டது.

சமயம் ( Religion)

மக்களுடைய குடும்பம், குடிகள் என்பவற்றிற்கு புறம்பாக சமயம் என்பது எழுச்சியடைந்தது.சமயம் சில வணக்க முறைகளை சமூகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தியதாக ஊகிக்கப்படுகிறது. இரத்த உறவு அரசு உதவுதல் என்பது பலவீனம் அடைகின்ற போது சமயம் என்பது இந்நோக்கத்தினை நிறைவு செய்வதற்கு உதவியது.ஆரம்பத்தில் மூதாதையர் வணக்க முறை சமூகத்தில் வழக்கில் இருந்திருந்தது. குடிமுறை சமூக வாழ்க்கையில் முதன்மையான மனிதனாக கருதப்பட்ட ஒருவன் கவர்ச்சிகரமான செயற்பாடுகள் மூலம் முதன்மைப்படுத்தப்பட காரணமாகியது.வித்தைகள், தந்திரங்கள் என்பவற்றினை இவன் வெளிப்படுத்தி சமூக அதிகாரத்தினை பெற்றுக் கொண்டான்.இதுவே பின்னர் படிப்படியாக வளர்ந்து சமயம் , சமயநிறுவனங்கள் என்பன அதிகாரத்தினை கைப்பற்றவும் அதன் வழி சமய நிறுவனங்கள் அரசு வளர்வதற்கு உதவியதாகவும் கருதப்படுகின்றது.

பலம் ( Force )

பலம் என்ற காரணி, யுத்தம், மோதல் என்ற வடிவில் தோற்றம் பெறுகின்றது.பலம் என்ற காரணி குடும்பத் தலைவரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப முதன்மையடைந்து குடிகளின் உயர் அதிகாரத்தினை வைத்திருப்பவர் என்ற வடிவில் முதன்மையாக்கப்பட்டது. பலம் என்ற எண்ணக்கரு ஒருவரின் அதிகாரத்தை எவ்வாறு தீர்மானிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல்வேறு உதாரணங்களை நாம் காட்ட முடியும்.வரலாறு என்பது குடிகளுக்கிடையிலான யுத்தத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்ற ஒரு கருத்து காணப்படுகின்றது.யுத்தத்தில் வெற்றி பெற்றவர் எஜமானாக மாற்றப்படுகின்றதுடன் அவரே குடிகளின் பிரபுவாகவும் காணப்படுகின்றார்.குடிகளின் அங்கத்தவர்கள் இப்பலசாலியின் கீழ் வாழ்வதற்கும் தொழில் புரிவதற்கும் ஏற்ற பாதுகாப்பு அல்லது ஏனைய குழுக்களில் இருந்து வரும் ஆக்கிரமிப்பு கருதி ஒன்றுபடுகின்றார்கள்.பலசாலியின் பலம் இவரை தலைவராக்குவதுடன் அரசியல் இறைமை கீழ்படிவு என்பன ஏற்பட்டு அரசு ஒன்று இ;ங்கு உருவாகின்றது.இவற்றில் போராட்டமும் யுத்தமும் அரசு ஒன்று உருவாவதற்கான முதல் தர மூலகமாகும்.பலத்தினால் உருவாகும் குழுக்கள் பின்னர் பொது நலனுக்காக ஐக்கியப்பட்டு கொண்ட வரலாறு நிறையவே உள்ளது.எனவே பலம் என்பது அரசு வளர்வதற்கு பங்காற்றுகின்ற காரணியாக கருதப்படுகின்றது.

பொருளாதாரம் ( Economy )

மனிதன் தனது வாழ்விற்காக சில பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான்.மிகவும் ஆரம்ப காலத்தில் மனிதன் நாடோடியாக இடத்திற்கு இடம் அசைந்து வாழ்ந்து வந்தனர்.நாடோடியாக இடத்திற்கு இடம் அசைந்து உணவு தேடுவதே மனிதனின் பிரதான நோக்கமாகவும் இருந்;தது.ஆனால் காலப்போக்கில் மனிதன் தனது வாழ்க்கையினை நிரந்தரமாக ஒரு இடத்தில் அமைக்கத் தொடங்கிய போது தொழிற்பிரிவினை உருவாகத் தொடங்கியது.சிலர் சமயத்தினை முதன்மையாக கொண்டு செயற்பட சிலர் பாதுகாப்பினை முதன்மையாக கொண்டும் சிலர் விவசாயம் வர்த்தகம் கைத்தொழில் என பிரிவுபட்டும் சென்றனர்.தற்காலத்தில் பொருளாதார வாழ்க்கை என்பது முக்கியமான பண்பாகிவிட்டது.தனியார் சொத்துடமை என்பது கூட நிறுவனமயப்பட்டதாகி விட்டது.மக்கள் தமக்கு உடமையாகவுள்ள மூலவளங்;களை பயன்படுத்தி உற்பத்திகளில் ஈடுபடக் கூடிய வல்லமையினை பெற்றுவிட்டார்கள். ரூசோவின் கருத்துப்படி சொத்துடமை உருவாக்கம் என்பது சமூகத்தில் மோதல்களை தோற்றுவித்து சமாதானம் என்பது இல்லாமல் போயிருந்தது. இதனால் மக்கள் சமூக ஒப்பந்த அடிப்படையில் அரசை தோற்றுவித்தார்கள்.

பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பகாலம் தொடக்கம் அரசு ஒன்று அபிவிருத்தியடைவதற்கு பங்காற்றியுள்ளது.சொத்துடமையில் ஏற்பட்ட வேறுபாடு சமூக வர்க்கத்தினையும் சாதிகளையும் உருவாக்கியது.ஓரு வர்க்கம் (பலமான வர்க்கம்) ஏனைய வர்க்கத்தினை பொருளாதார சுரண்டலுக்காக அடக்கியாள முற்பட்ட போது அரசு அபிவிருத்தியடையத் தொடங்கியது.தனியார் சொத்துக்களின் வளர்ச்சியானது சொத்துக்களை பாதுகாக்கவும் சொத்துக்களை பேணவும் சொத்துத் தகராறுகளை தீர்க்கவும் சட்டங்கள் உருவாக்கவும் நிறுவனம் தேவையானது. இதுவே அரசாங்கமாக அபிவிருத்தியடைந்தது.

அரசியல் உணர்வு ( Political Consciousness )

மக்கள் தம்முடைய பாதுகாப்பு, சொத்துக்கள் என்பவற்றை ஏனைய எதிர் சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கான தேவை அவசியமாகின்றது.இவை எல்லாம் அரசியல் அதிகாரம் எழுச்சியடைவதற்கு காரணமாக அமைவதுடன் அரசியல் நிறுவனம் பற்றிய உணர்வு எழுவதற்கும் காரணமாக அமைகின்றது.மக்களுக்கு தாம் வாழுகின்ற தாய் நாட்டின் மீதான பற்றுதல் வளர இது காரணமாக அமைகின்றது.இப்பற்றுதலே அரசு வளர்வதற்கும் உறுதி பெறுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

மேலே கூறப்பட்ட அனைத்துக் காரணிகளும் அரசின் நீண்ட பரிணாம வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ததாக பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள்.பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளர்கள் அரசு பற்றிய எல்லாக் கோட்பாடுகளையும் கருத்தில் எடுத்து அவற்றினூடாக அரசு அபிவிருத்தி அடைந்தது என்ற புதிய விளக்கத்தினை கொடுக்க முற்படுபவர்களாக காணப்படுகின்றார்கள்.

Share

Who's Online

We have 57 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.