Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...

Around the World

  • Initial forecasts suggest damage could cost as much as 7 percent of the South American nation's GDP.

    Read more...
  • Iran warns vessels to use only Tehran-approved routes as IMO halts Hormuz evacuation after ship struck.

    Read more...
  • La Guaira, the region hardest hit by two earthquakes in Venezuela, has been left devastated.

    Read more...
  • Netherlands supporters got the party going in Kansas City, US ahead of their final group stage game against Tunisia.

    Read more...
  • Israeli PM Benjamin Netanyahu stated that Israeli forces will maintain a presence in southern Lebanon, Syria and Gaza.

    Read more...
  • State-backed Ashura events showcase leaders killed by US, Israel, seen as martyrs in the mould of Imam Hussein.

    Read more...
  • Kibiwott Kandie initially faced an eight-year ban split evenly across two violations, but received a one-year reduction.

    Read more...
  • The US secretary of state tells Gulf Cooperation Council (GCC) states that the Iran deal will ensure their security.

    Read more...
  • Devastated residents recall the moment when they experienced the twin earthquakes that toppled buildings and killed 188.

    Read more...
  • Demonstrators mark the second anniversary of a 2024 protest where 60 people were killed by security forces.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.04.27, 2013.04.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

 

clip_image002 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பிராதான கட்சிகளாகும். தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழ் தேசியவாதத்திற்கு வழங்கும் உயர்ந்த பட்ச மதிப்பு என்பவற்றினால் இவ் இரு கட்சிகளும் இந்தியப் பொதுத் தேர்தலிலும் தமிழக சட்டசபைக்கான தேர்தலிலும்,அதிக வாக்குகளைத் தென்னிந்திய தமிழ் மக்களிடமிருந்து பெற்று வருகின்றன. அதேபோன்று இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் இந்தியாவில் தேர்தல் காலப் பிரச்சாரங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது பொதுவானதொரு நிகழ்வாகவுள்ளது. குறிப்பாகத் தேர்தல்காலங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தமது வலுவான கிளர்ச்சிகளை இலங்கைத் தமிழர்கள் விவகாரங்கள் தொடர்பில் மேற்கொள்கின்றன. தமிழக அதிகாரப் போராட்டத்தில் மிகவும் ஆழமாகவும், அனுதாபமாகவும் இலங்கைத் தமிழர் விடயம் பார்க்கப்படுவதால் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆயினும் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தெளிவானதொரு கொள்கையினை இதுவரை வகுத்திருக்கவில்லை என்றே கூறவேண்டும். சூழலுக்கும்,தேவைக்கும் ஏற்ப இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தை கையாளுகின்ற கட்சிகளாகவே வரலாற்றில் இவ்விரு கட்சிகளும் தம்மைப் பதிவு செய்து வைத்துள்ளன. இவ்வகையில் சமகாலத்தில் தமிழகத்தில் நிகழும் செயற்பாடுகள் தொடர்பில் மீள் சிந்தனை அவசியமாகவுள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் கனவு

1985 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் கலைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பிற்கு (Tamil Eelam Supporter’s Organization-TESO) மீண்டும் புத்துயிரளித்து 2012 ஆம் ஆண்டு,ஆவணி மாதம் 12 ஆம் திகதி சென்னையில் மகாநாடு ஒன்றினை கலைஞர் கருணாநிதி நடாத்தினார். இம் மகாநாட்டினைத் தடுத்து நிறுத்துவதற்கு செல்வி ஜெயலலிதா முயற்சித்ததுடன்,இதற்குத் தேவையான சட்டநடவடிக்கைகள் அனைத்தையும் செய்து பார்த்தாராயினும்; அவரால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ரெசோ மகாநாட்டுத் தீர்மானத்தால்; திராவிடமுன்னேற்றக் கழகம் தமிழக மக்கள் மத்தியில் அதிக ஆதரவினை பெற்றுவிடக் கூடும். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் பின்னடைவினை எதிர்காலத்தில் சந்திக்கலாம் என்றதொரு அச்சம் செல்வி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது. எனவே இதற்குச் சமாந்திரமான அரசியல் செயற்பாடுகளைச் செய்வதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தமிழக சட்ட சபையில் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்து அவற்றை நிறைவேற்றும்படி மத்தியரசினைக் கோரியது.

  • இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் வரை இலங்கையினை நட்பு நாடாகப் பேணுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
  • இலங்கைத் தமிழர்கள்; மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகரமான சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நிறுத்தப்படும் வரை பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
  • கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மகாநாட்டை இந்தியா பகீஸ்கரிக்க வேண்டும்.
  • இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனியரசு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும்.

மேலும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிறிக்கட் போட்டிகளில் குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதை ஜெயலலிதா தடை செய்திருந்தார். அத்துடன் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பு இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடாத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவிக்கு இப்போதுள்ள கனவு எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமமந்திரியாக வரவேண்டும் என்பதேயாகும். இதற்கு ஏகோபித்த தமிழக மக்களின் அரசியல் ஆதரவு செல்வி ஜெயலலிதாவிற்குத் தேவையாகவுள்ளது. இவ் அரசியல் ஆதரவினைப் பெற்றுக் கொள்ள இலங்கைத் தமிழ் மக்கள்; மீதான தமிழக மக்களின் அனுதாப அலை தேவைப்படுகின்றது. எனவே இதற்கு ஏற்றவகையில் தனது அரசியல் தந்திரோபாய கொள்கையினை வகுத்து தமிழக மக்களின் வாக்குகளை வேட்டையாட செல்வி ஜெயலலிதா முனைகின்றார். தமிழகத்தில் முழுமையான தேர்தல் வெற்றியை செல்வி ஜெயலலிதா பெறுவராக இருந்தால் மத்திய அரசு ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவதற்கு அவர் விதிக்கப்போகும் முன் நிபந்தனை பிரதமமந்திரிப் பதவியாக இருக்கக் கூடும்.

கலைஞரின் வியூகம்

தமிழ்நாட்டில் இழந்திருக்கும் தனது அரசியல் அதிகாரத்தினையும் செல்வாக்கினையும் மீளவும் கைப்பற்றிக் கொள்ள கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இலங்கைத் தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள்.இதற்காக 'சிங்களவர்களை ஒருபோதும் நம்பமுடியாது. நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதமிருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதிமொழியை வழங்கிவிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர். இனியும் தமிழ்மக்களால் சிங்களவர்களுடன் இணைந்து வாழமுடியாது. தமிழர்களுக்கென தனிநாடு,தமிழ் ஈழநாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐக்கிய நாடுகள் சபையில் பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.' எனக் கூறத் தொடங்கிவிட்டார்.

இதற்கு ஏற்றவகையில் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் அரசியல் வாதியாக தன்னை மாற்றிக்கொண்டுள்ள கலைஞர் கருணாநிதி இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக குரல் எழுப்பி மத்தியரசை உலுப்ப முயற்சிக்கின்றார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கலைஞர் கருணாநிதி விமர்சிக்கும்போது 'சீனாவுடன் மிகவும் நெருக்கமான தந்திரோபாய நட்பினை பேணிவருகின்ற இலங்கை தனது நட்பு நாடாக இ;ந்தியாவினைக் கருதும் என எதிர்பார்க்க முடியாது. மேலும் சீனாவின் உதவியுடன் இலங்கை இராணுவம் பலாலி,காரைநகர்,மன்னார்,தள்ளாடி,ஆனையிறவு ஆகிய இடங்களில் இராணுவத்தளங்களை உருவாக்கி வருகின்றது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியங் குவாங்லீ ( Liang Guanglie) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிச் சென்றுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தனது அக்கறையினை கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

மறுபக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் தேசியவாதம் தொடர்பாகத் தெளிவானதொரு நிலையில் தாம் இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் தென்னிந்திய வாக்கு வங்கியினைப் பயன்படுத்தி மத்தியரசில் தனக்கிருக்கும் வலுவானதொரு நிலையினை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றது. இவ்வடிப்படையிலேயே இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினை திராவிட முன்னேற்றக் கழகம் கையாளுகின்றது. இன்னோர்வகையில் கூறின் தமிழகத்தில் முழுமையான தேர்தல் வெற்றியே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும். எனவே இலங்கைத் தமிழ் மக்கள் திராவிட முன்னெற்றக்கழகத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

பாரதீய ஜனதாக் கட்சியின் அவசரம்

2014 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தியப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டுப் பங்காளியாக இந்திரா காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டமைப்பு (UPA) மாத்திரம் தான் இருக்க முடியும் என்ற சூழ்நிலை எதுவும் இல்லை. அண்மையில் பாரதிய ஜனதாக் கட்சி சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகிய யஸ்வன் சின்கா ( Yashwant Sinha ) சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரையில் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினையும் தொடர்புபடுத்தியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு நிகழப்போகும் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தலைமையிலான கூட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக பாரதீய ஜனதாக் கட்சி செயற்படும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கட்சி இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரங்கள் தொடர்பாக சென்னையில் விடுத்த செய்தியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் செலுத்தப் போகும் செல்வாக்கினை எதிர்வு கூறுவதற்குப் போதுமானதாகும்.

இந்தியப் பாராளுமன்ற மேற்சபையில் 'பாரதீய ஜனதாக் கட்சி பதவிக்கு வந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக எமது கொள்கையினை நடைமுறைப்படுத்துவோம்' என பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளதாக இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்களை பாரதீய ஜனதாக் கட்சி உள்வாங்கித் தானும் கருத்துக் கூறுகின்றது. இதன்மூலம் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுடன் பாரதீய ஜனதாக் கட்சியும் உடன்பட்டுள்ளது என்றதொரு போலி காட்சியினை மக்கள் மத்தியல் உருவாக்குகின்றது.

இந்திரா காங்கிரஸின் தடுமாற்றம்

இந்திரா காங்கிரஸ்சைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பாக தேர்தல் காலங்களில் தமிழகத்தில் பேசவேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால் வெளிப்படையாகத் தேர்தல்காலங்களில் தான் இவ்வாறு பேசுவது மத்திய அரசு உருவாக்கும் வெளிவிவகாரக் கொள்கைக்கு விரோதமானதாகும். எனவே தனது பங்காளிக் கட்சிகளை முகவர்களாகப் பயன்படுத்தி இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரத்தினை பேசுவதற்கு காங்கிரஸ் விரும்புகின்றது. இதன்மூலம் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துகின்ற அதேநேரம் மத்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. எனவே இந்தியப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசியலாக்க இந்திய அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன.

தமிழகத்தின் கண்ணீர்

தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்த அல்லது மத்தியரசில் அரசாங்கத்தினைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதற்கும், சர்வதேசிய விவகாரங்களில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் பிராந்திய தந்திரோபாய நலன்களுடன் தொடர்புபடுவதற்கும் விரும்புகின்றன. எனவே 2014 ஆம் ஆண்டு நிகழப் போகும் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் முழுமையான வெற்றியைப் பெறுவதே தமிழகத்திலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளினதும் இலக்காக இருக்கின்றதேயன்றி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது என்பது இக் கட்சிகளின் கொள்கையுமல்ல, நோக்கமுமல்ல. இக்கட்சிகளின் கொள்கைப் பிரகடனத்தில் இவ்வாறான வாசகங்கள் எதனையும் எங்கும் காணமுடியாது.

வெளிப்படையாகக் கூறினால் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கடந்தகாலங்களில் தமது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.இவைகளுள் திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் முன்னிலையிலுள்ளன. இங்குள்ள துன்பம் யாதெனில் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான தனது கட்சிக் கொள்கையினை முழுமையாக மாற்றிக் கொள்வதேயாகும். எனவே எதிர்கால தேர்தல் வெற்றிக்காகவும், சந்தர்ப்பவாத தமிழக அரசியலுக்காகவும் மீண்டும் மீண்டும் இலங்கைத் தமிழர்கள் பணயம் வைக்கப்படுகின்றார்கள் என்பதே யதார்த்தமாகும். எனவே இந்திய அரசியல்வாதிகள் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தினை உரத்துக் கூறி அரசியல் இலாபம் சம்பாதிக்க வேண்டிய சூழலிலேயே இன்றும் உள்ளனர் என்ற யதார்த்தத்தை இலங்கைத் தமிழ்மக்கள் புரிந்துகொண்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுவது எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் பாரிய உதவியாக அமையும்.

 

Share

Who's Online

We have 99 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.